பங்கு சந்தையில் வணிகம் செய்யும் ஒருவரை நான் முதன்முதல்லாக சந்திப்பது 2013 அக்டோபரில். என் 23ஆவது வயதில். கல்லூரி முடித்து ஒருவருடம் கழிந்த பின்னர் நான் எனது முதல் வேலையில் சேர்ந்து அப்போதுதான் ஆறு மாதம் ஆகியிருந்தது. ஐடி வேலையில் இருந்து என்னை நானே மீட்டுக் கொள்வது எவ்வாறு என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த காலம். சந்தை எனக்கு அறிமுகமான அனுபவத்தை சொல்லும்முன் அன்றைய சூழலில் நான் பார்த்துவந்த ஐடி வேலை குறித்து என் மனநிலையை சொல்லியாக வேண்டும்.
சென்னையில் காக்னிசண்ட் எனும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. எனக்கு விருப்பமே இல்லாத டெஸ்டிங் துறையில் நான் வேலை செய்வதாக நிர்ணயிக்கப்பட்டு அதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இருப்பதிலேயே டெஸ்டிங் துறையில் தான் வேலைப்பளு குறைவு என்று சொல்வார்கள். ஆனால் அன்றைய சூழலில் டெஸ்டிங் துறை என்பது புதிதாக ஐடி வேலையில் நுழைபவர்களால் ஒருபடி கீழானதாகவே பார்க்கப்பட்டது. காரணம் டெஸ்டிங் துறை ஒப்புநோக்க திறன் குறைவானவர்களுக்கானது என்ற எண்ணம். ஐடியில் முக்கிய திறனாக கருதப்படும் programming skill இத்துறைக்கு தேவையில்லை என்று பொதுவாக நம்பப்பட்டதால் ‘லட்சிய’ ஐடி ஊழியன் எவனும் டெஸ்டிங் துறையை உயர்வாக எண்ணவில்லை. வேலைக்கு புதிதாக சேர்ந்த காலத்தில் அனைவருமே லட்சிய ஊழியர்கள்தான் என்பதால் நானும் அப்பாவனையை மேற்கொண்டேன்.
மேலும் ஐடி வேலையே ஒருவகை இரண்டாம்தர வேலைதான் என்ற பிம்பம் எனது கல்லூரி சூழலிலேயே ஏற்பட்டிருந்தது. இயந்திரவியல், மின்னனுவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களிடம் இந்த மனப்பான்மையை காணலாம். நான் படித்தது இயந்திரமின்னனுவியல் (Mechatronics) பிரிவு. அன்றெல்லாம் ’படித்த படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்வதே சரியானது/உயர்ந்தது’ என்ற பிழையான கற்பிதம் மாணவர்களிடம் பரவலாக நிலவியது. குறிப்பாக பிறதுறை மாணவர்கள் ஐடியில் வேலைக்கு சேர்வதென்பது ஒருவகை சரணடைதலாகவே பார்க்கப்பட்டது. உண்மையில் பிற துறைகளில் அத்தனை பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பும் இருக்கவில்லை. ஆனால் இந்த நிதர்சனத்தை புரிந்துகொள்ளும் முதிர்வு அன்றைக்கு எங்களில் பெரும்பாலானோருக்கு இருக்கவில்லை. இது ஒருவகையில் விசித்திரமானது. ஒரு சராசரி இயந்திரவியல் மாணவனுக்கு அவனது துறை அடிப்படைகள் குறித்து எதுவும் தெரிந்திருக்காது, ஆனால் ஐடி வேலை ஆகாது, கோர் கம்பெனிதான் கெத்து என்பான். கோர் கம்பெனியின் வேலை சூழல் குறித்த தெளிவோ அந்த வேலையை அடைவதற்கான திறன் வளர்ப்போ இல்லாமல் ஐடி வேலையை விமர்சிப்பதன் ஊடாக மட்டுமே ’லட்சிய பொறியாளன்’ என்கிற பிம்பத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இவையெல்லாம் கல்லூரி முடிவடைவதற்கு ஒரு மூன்றுமாதம் முன்புவரை மட்டுமே. மெல்ல மெல்ல மனநிலை மாறுபடுவதை காணலாம். இறுதி தேர்வுகள் முடிவடையும்போது ஐடி தவிர நமக்கு வேறு போக்கிடம் கிடையாது என்ற நிலை கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும்.
இதுபோக நமது சூழலில் பொதுவாக ஐடிகுறித்து இருக்கும் விந்தையான எதிர் மனநிலை. இங்கு பெரும்பாலானோருக்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலைபார்த்து வார இறுதியில் மாலுக்கு செல்வதென்பது உள்ளூர கொண்டிருக்கும் லட்சியக் கனவு. ஆனால் பொதுவெளியில் ஐடி ஊழியர்கள் அனைவரும் அமேரிக்க அடிமைகள் என்றும் சொல்லியாக வேண்டும். ’அங்கெல்லாம் ஸ்ட்ரெஸ்ஸ் அதிகமாமே’ என பச்சாதபப்படும் பக்கத்துவீட்டு ஆண்டி ஒரு ரகம் என்றால், ‘எப்பவேனா வேலையவிட்டு தூக்கிடுவாங்க்லாமே?’ என நமக்காக இரக்கப்பட்டு மாற்று தொழில்/ வேலைவாய்ப்பு யோசனைகள் சொல்லும் சலூன் கடைக்காரர் இன்னொரு ரகம்.
இவ்வாறு கல்லூரி சூழலிலும் சரி, பொது வெளியிலும் சரி, ஐடி வேலை என்பது நடைமுறை உண்மை என தெரிந்தாலும் போலியான லட்சிய பாவனைகள் காரணமாக அது இரண்டாம்தரமாக பார்க்கப்பட்டது.
இம்மாதிரி பொது மனநிலைகள் குறித்து எனக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து வந்தது என்றாலும் ஐடி வேலை என்பது தனிப்பட்ட முறையில் என் இயல்புக்கு ஒத்துவராது என்ற எண்ணம் எனக்கு முன்னரே இருந்தது. அது ஒருவகையில் சராசரிகளின் லட்சிய வேலை என்பதாலேயே என்னை அதனுடன் பொருத்திக் கொள்வது சரியாகப் படவில்லை. அந்த வேலையில் தொடர்ந்தால் எனக்கு விருப்பமில்லாத நுகர்வு சார்ந்த வாழ்வை வாழ நேரிடும் என நினைத்தேன். கைநிறைய சம்பளத்துடன் புறநகரில் வீடுவாங்கி ‘செட்டில்’ ஆவதென்பது அசடுகளின் செயல் என்றும் பெரிதாக எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இம்மாதிரி ‘செட்டில்’ ஆகிவிடக்கூடாது என்கிற உணர்வு எப்போதும் இருந்து வந்தது.
அதேசமயம் கல்விக் கடன், வீட்டுக் கடன் போன்ற பொருளியல் கடமைகள் எனக்கு இருந்ததால் அன்றைய சூழலில் நிலையான வருமானம் தரும் ஐடி வேலை எனக்கு இன்றியமையாததாக இருந்தது. எனவே வருமானத்திற்கான மாற்று வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளும்வரை அல்லது குறைந்தபட்சம் கடன்களை அடைக்கும்வரை அவ்வேலையில் தொடர்வர்தெனும் முடிவில் இருந்தேன்.
இச்சூழலில்தான் பங்கு சந்தை குறித்த அறிமுகம் சென்னை, பழவந்தாங்கலில் நான் தங்கியிருந்த பேச்சிலர் அறையில் கிடைத்தது. அதுவரை சென்செக்ஸ் நிஃப்டி போன்ற வார்த்தைகளுக்குகூட எனக்கு அர்த்தம் தெரியாது. ஆச்சர்யம்தான். பங்குசந்தை சார்ந்த செய்தி துணுக்குகளை சூழல் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கிறது. செய்தித்தாள்களில் நடுப்பக்கத்திற்கு அடுத்த இடதிலும், தொலைக்காட்சி செய்திகளில் விளையாட்டுக்கு முன்பாகவும் பங்கு சந்தைக்கு கட்டாயம் இடம் உண்டு. அதற்க்கென்றே பிரத்யேகமான செய்தி சானல்களும் உண்டு (இவை எதுவும் சந்தையை புரிந்துகொள்ள இம்மிகூட உதவாது என்பது வேறுவிஷயம்). ஆனால் சந்தை எவ்வாறு செயல்படுகிறதென்ற தோராயாமான புரிதலோ அதுகுறித்த பிரக்ஞையோ பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. மிகச்சிலரே அதுகுறித்து கவனம்கொண்டு புரிந்துகொள்ள முயற்சி செய்து தவறான புரிதலுடன் இருப்பார்கள். ஆம் அதுபற்றி தெரிந்து கொள்வது பெரும்பான்மைக்கு அவசியமில்லைதான். ஆனால் தினசரி நம் பார்வையில் பட்டுக் கொண்டேயிருக்கும் ஒரு விஷயம் குறித்து நாம் முழு அறியாமையுடன் இருப்பது ஒரு புரிதலை அளித்தது. நாள்தோறும் நம் பார்வையில் பட்டுக் கொண்டே இருக்கும் அதேசமயம் நம் கவனத்தில் வராத பலநூறு விஷயங்கள் இருக்கலாம். ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு தனி உலகமே செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். அப்படி ஓர் உலகம் எனக்கு அறிமுகம் ஆன விதம் குறித்து அடுத்த பதிவில்.

No comments:
Post a Comment